அ, உ, க, ப -ஆகிய எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள். வாயைத் திறந்து ஒலித்தாலே. அ என்னும் எழுத்து ஒலிக்கிறது. உ என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன. நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டும்போது க என்னும் எழுத்து பிறக்கிறது. ப என்னும் எழுத்து இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் பிறக்கும் இடமும் பிறக்கும் முயற்சியும் வெவ்வேறாக உள்ளன. 

பிறப்பு 

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு , முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர். 

இடப்பிறப்பு 

 • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
 • வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
 • மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
 • இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
 • ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது. 

முயற்சிப் பிறப்பு – உயிர் எழுத்துகள் 

 • அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன . 
 • இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. 
 • உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.

முயற்சிப் பிறப்பு – மெய் எழுத்துகள

 • க், ங் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன. 
 • ச், ஞ் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
 • ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன. 
 • த், ந் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன
 • ப், ம் – ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன. 
 • ய் இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் 

பிறக்கிறது. 

 • ர், ழ் – மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன. 
 • ல் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது. 
 • ள் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது. 
 • வ் – மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது. 
 • ற், ன் – மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.

சார்பெழுத்துகள்

ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.

எழுத்துகளின் பிறப்பு

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன

மெய் எழுத்துகளின் இடப்பிறப்பு :

 • வல்லின மெய்கள் க் ச்ட்த்ப்ற் ) – மார்பு
 • மெல்லின மெய்கள் (ங் ஞ் ண் ந்ம்ன் ) – மூக்கு
 • இடையின மெய்கள் (யார் ல் வ் ழ் ள்) – கழுத்து

ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு

 • ழகரம் – மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும்.
 • லகரம் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும்
 • ளகரம் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும்.

மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்தவுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.

கல், பூ, மரம், புல், வாழ்த்து , சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா..

கள்க்கள்ங்கள்ற்கள்
மாணவர்கள்வாழ்த்துக்கள்வளருங்கள்சொற்கள்
ஆசிரியர்கள்மக்கள் விருப்பங்கள்பற்கள்
பெற்றோர்கள்பூக்கள்சொந்தங்கள்கற்கள்
மதிப்பெண்கள்பசுக்கள்மாதங்கள்புற்கள்

Add comment

Your email address will not be published. Required fields are marked *