தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது பெயரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கும்.
பொருள் :
- முற்றுவிகுதி கொண்ட வினைச்சொல்
ஆங்கிலம் :
- Finite verb
விளக்கம் :
- வினைமுற்று = வினை + முற்று
- ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) கற்றான், நின்றாள், சென்றார், வந்தது, வந்தன. ஐம்பால் வினைமுற்றுகள் இவை.
வகைகள் :
- தமிழில் வினைமுற்றுகள் நாவகையில் அமையும். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, ஏவல் வினைமுற்று, வியங்கோல் வினைமுற்று..
தெரிநிலை வினைமுற்று :
- ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும.
- செய்பொருள் ஆறையும் காட்டும் வினைமுற்று..
- (எடுத்துக்காட்டு): ரேவதி மாலை தொடுத்தாள்.
- இதில் ரேவதி என்பது வினையை செய்யும் கருத்தா, தொடுத்தாள் என்பது கருத்தாவின் செயலை உணர்த்தும் வினைமுற்று. இச்சொல்லிலிருந்து, செய்பவன் – ரேவதி, கருவி – நார், பூ, கை நிலம் – அவள் இருப்பிடம், செயல் – தொடுத்தல், காலம் – இறந்த காலம், செய்பொருள் – மாலைஆகியவற்றை அறியலாம். இவ்வாறு, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும். இவற்றுள் சில குறைந்து வரும் ஆனால் காலத்தை தெளிவாகக் காட்டும்
குறிப்பு வினைமுற்று :
- குறிப்பு வினைமுற்று என்பது செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று எனப் பெயர் பெற்றது.
- (எடுத்துக்காட்டு)::அவன் பொன்னன்.
- இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். இதில், பொன் என்னும் பொருளின் அடிப்படையில் தோன்றி அதனைப் பெற்றிருக்கும் கருத்தாவை மட்டும் உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருள் முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும்
- குறிப்பு வினைமுற்றுகளுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:
- பொன்னன் – பொருள்
ஆரூரன் – இடம்
ஆதிரையான் – காலம்
கண்ணன் – சினை
கரியன் – குணம்
நடையன் – தொழில் - இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்
ஏவல் வினைமுற்று :
- முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.
- (எடுத்துக்காட்டு) :
- ஏவல் ஒருமை வினைமுற்று : நீ நட, நீ செய், நீ போ, நீ படி
- ஏவல் பன்மை வினைமுற்று : நீர் உண்குவீர், நீர் வாரீர், நீர் செய்குதும்.
வியங்கோள் வினைமுற்று :
- நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாகும். இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.
- வெல்க, வாழ்க – வாழ்தல் பொருள்
- வீழ்க, ஒழிக – வைதல் பொருள்
- வருக, உண்க – விதித்தல் பொருள்
- அருள்க, கருணைபுரிக – வேண்டல் பொருள்.
என் கேள்விக்கு என்ன பதில்
- ‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.
- அவன் வாழ்க. (ஆண்பால்)
- அவள் வாழ்க. (பெண்பால்)
- மக்கள் வாழ்க. (பலர்பால்)
- அது வாழ்க. (ஒன்றன்பால்)
- ‘அவை வாழ்க. (பலவின்பால்)
- நாம் வாழ்க. (தன்மை )
- நீங்கள் வாழ்க. (முன்னிலை)
- அவர்கள் வாழ்க. (படர்க்கை)
- மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று?
- மேய்ந்தது.
- வினைமுற்று என்றால் என்ன?
- பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும். (எ.கா.) ரேவதி எழுதினாள்.
- தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
- .செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறனையும் தெரிநிலை வினைமுற்று காட்டும்.
- (எ.கா.) எழுதினா ன்
செய்பவர் – மாண வன்
காலம் – இறந்தகாலம்
கருவி – தாளும் எழுதுகோலும்
செய்பொருள் – கவிதை
நிலம் – பள்ளி
செயல் – எழுதுதல்
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
- க, இய, இயர், அல்
- ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
ஏவல் வினைமுற்று | வியங்கோள் வினைமுற்று |
கட்டளைப் பொருளில் மட்டும் வரும் | வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டல், என்னும் பொருள்களில் வரும் |
முன்னிலைக்கு மட்டும் உரியது | இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியது |
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு | ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை |
விகுதி பெற்றும் பெறாமலும் வரும் | விகுதி பெற்றே வரும் |
தமிழ் எண்கள் ஓர் அறிமுகம்
வண்ணமிடப்பட் டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக
- ஆசிரியர் தினம் செப்டம்பர் 5 – ரூ
- உலக ஓசோ ன் நாள் செப்டம்பர் 16 – கசு
- மகாத்மா காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 – உ
- குழந்தைகள் தினம் நவம்பர் 14 – கச
தொடர் வகைகள் .
- தொடர்கள் பொருள் அடிப்படை யில் நான்கு வகைப்படும்.
- செய்தித் தொடர்
- வினாத் தொடர்
- விழைவுத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
செய்தித் தொடர்
- ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) : P.V. சிந்து 2021 டோக்கியோ ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வினாத் தொடர்
- ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.
(எ.கா.) : சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விழைவுத் தொடர்
- ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.) :
- இளமையில் கல். (ஏவல்)
- எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் (வேண்டுதல்)
- பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. (வாழ்த்துதல்)
- கல்லாமை ஒழிக. (வைதல்)
உணர்ச்சித் தொடர்
- உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.)
- மீரா பாய் சானு 2021 டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்( உவகை)
- கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும் (அச்சம்)
- இளைஞர்களிடம் போதை பழக்கம் அதிகரித்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு கவலை (அவலம்)
- இறைவனின் படைப்பில் கணிக்க முடியாத இயற்க்கை (வியப்பு)
சொல் சொக்கட்டான்
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
- முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் : செய்தித் தொடர்
- கடமையைச் செய் : ஏவல் தொடர்/விழைவுத்தொடர்
- பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! : உணர்ச்சித் தொடர்
- நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? : வினாத்தொடர்
தொடர்களை மாற்றுக
- வேற்றுமையில் ஒற்றுமையே இந்திய குடியரசின் மேன்மை.(உணர்ச்சித் தொடராக மாற்றுக)
- இந்திய குடியரசின் மேன்மையே மேன்மை
- 2021 கிரிக்கெட் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் நியூசிலாந்து வென்று விட்டதே (செய்தித் தொடராக மாற்றுக)
- 2021 கிரிக்கெட் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் நியூசிலாந்து வென்று விட்டது
- அதிகாலையில் துயில் எழுதுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
- அதிகாலையில் துயில் எழு
- வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வினால் இன்று மழை பெய்யுமா? (செய்தித் தொடராக மாற்றுக)
- வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வினால் இன்று கன மழை பெய்யும்.
- கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது (வினாத்தொடராக மாற்றுக.)
- தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதா?
உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.
வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
- நடக்கிறது – நட
- போனான் – போ
- சென்றனர் – செல்
- உறங்கினாள் – உறங்கு
- வாழிய – வாழ்
- பேசினாள் – பேசு
- வருக – வா
- தருகின்றனர் – தா
- பயின்றாள் – பயில்
- கேட்டார் – கேள்
கலைச் சொற்கள் அறிவோம்
- பழங்குடியினர் – Tribes
- சமவெளி – Plain
- பள்ளத்தாக்கு – Valley
- புதர் – Thicket
- மலைமுகடு – Ridge
- வெட்டுக்கிளி – Locust
- சிறுத்தை – Leopard
- மொட்டு – Bud
Add comment